கொழும்பில் என்.பி.பி. ஆட்சியமைக்க பிரபா கணேசனின் கட்சி நேசக்கரம்!

பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தேசிய கூட்டணி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு மாநகர சபையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயகத் தேசியக் கூட்டணிக்கு கொழும்பு மாநகர சபை உட்பட கிடைக்கப் பெற்ற பத்து ஆசனங்கள் மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும் என்றும், அரசு மக்கள் விரோதச் செயற்பாடுகளை முன்னெடுத்ததால் ஆதரவை வாபஸ் வாங்கத் தயங்க மாட்டோம் என்றும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.