கிராண்ட்பாஸ் விபத்தில் பெண் ஒருவர் மரணம்! – சடலம் அடையாளம் காணப்படவில்லை.

கொழும்பு மாவட்டம், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

ஒருகொடவத்தை சந்தியிலிருந்து ஆமர் வீதி பாபர் சந்தி நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.