முல்லைத்தீவு மாவட்ட கிக்பொக்சிங் சம்மேளன நிர்வாகத்தெரிவு.

முல்லைத்தீவு மாவட்ட கிக்பொக்கின் சம்மேளன நிர்வாகத்தெரிவு

முல்லைத்தீவு மாவட்ட கிக்பொக்கின் சம்மேளன நிர்வாக தெரிவு 28.10.2020ம் திகதி முல்லை கடற்கரை வீதியில் உள்ள மாவட்ட விளையாட்டு பயிற்சி நிலையத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு, புதுக்குடியிருப்பு, முத்தையன்கட்டு, இரணைம்பாலை, முல்லைநகர உடுப்புக்குளம் பிரதேச கழகங்களை உள்ளடக்கியதுடன் அனைத்து பிரதேச வீரர்களை உள்ளடக்கியதாக மாவட்ட விளையாட்டுப் பிரிவின் அனுசரணையுடன் மேற்படி சம்மேளனத்திற்குரிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

மேலும் நிர்வாக தெரிவின் பின்னர் எதிர்கால திட்டங்கள் மற்றும் விளையாட்டு துறையினை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.