யாழ் மாவட்ட covid 19 செயலணி கலந்துரையாடல்.

யாழ் மாவட்ட covid 19 செயலணி கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தின் Covid-19செயலணி கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் பங்குபற்றுதலோடு
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று 30.10.2020 காலை இடம்பெற்றது.

செயலணி கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலீஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர ஆணையாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்மந்தம்பட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஊடகத்துறையினர் என பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்கள்.

*திருமணம் – வீட்டில் நடத்த 50 பேர் அனுமதி

*மரணசடங்கு – 25 பேர் அனுமதி (2 தொடக்கம் 3 நாட்கள் நிறைவுறுத்த வேண்டும்) வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தருவதை தவிர்க்கவும்..

*நடைபாதை வியாபாரம் – மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி

*தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க தடை

*திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை

*விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவும்

*மக்கள் கூட்டங்கள், பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவும்

*பேரூந்துகளில் இருக்கை அளவுக்கு மட்டும் அனுமதி.

Leave A Reply

Your email address will not be published.