துனிசியாவிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்தவரே பிரான்ஸ் தாக்குதலை நடத்தியுள்ளார்

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் இரண்டு பெண்களையும் ஒரு ஆணையும் குத்திக் கொன்ற நபர் துனிசியாவிலிருந்து சில நாட்களுக்கு முன்பு இந்தாலிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 வயதையுடைய சந்தேகநபர், ஒரு இத்தாலிய செஞ்சிலுவை சங்க ஆவணத்தை வைத்திருந்தார், அவர் கடந்த மாதம் இத்தாலியின் லம்பேடுசா தீவுக்கு புலம்பெயர்ந்து படகு மூலம் வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை போலீசார் சுட்டதில் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இது ஒரு “இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

தற்போது தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற பொது இடங்களைப் பாதுகாக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 3,000 முதல் 7,000 வரை உயர்த்தவுள்தாக பிரான்சின் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு எச்சரிக்கை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.