மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் ஒருவருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் ஒருவருக்கு கொரோனா.

மட்டக்களப்பு பட்டிப்பளை, மாவடிமுன்மாரியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் மேலும் கூறியுள்ளதாவது, “மாவடிமுன்மாரியில் கொழும்பில் இருந்து தடிமன் காச்சலுடன் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று(வியாழக்கிழமை) இரவு கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியில் ஒருவர் உட்பட இருவர் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, கொழும்பில் இருந்து வருபர்கள் தொடர்பாக சுகாதார திணைக்களத்துக்கு பொதுமக்கள் அறியத்தர வேண்டும்

பேலிய கொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 பேர் இதுவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கு மாறாக கொழும்பு- பம்பலப்பிட்டியில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய பெரியபோரதீவு பட்டாபுரத்தைச் சேர்ந்த ஒருவர், காச்சல் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றபோது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொரோனோ தொற்றுடன் பொது பேரூந்தில் பிரயாணம் செய்து வீட்டை வந்தடைந்துள்ளார். இவருடன் பிரயாணம் செய்தவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நேற்று, வாழைச்சேனை மற்றும் மாவடிவேம்புமுன்மாரியில் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் கூடியளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.