தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உப பொலிஸ் பரிசோதகர் உயிர்மாய்ப்பு.

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மேற்படி உப பொலிஸ் பரிசோதகர் ஒபொலிஸ் நிலையத்தின் ஓய்வு அறையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹசலக்க பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஏ.எம். உபசேன அத்தநாயக்க எனவும், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் சில காலமாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.