தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 36 உறுப்பினர்கள் இன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டத் தலைவருமான கதிரவேலு சண்முகம் குகதாசன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

சட்டத்தரணி தியாகராஜா கேசவராஜன் சத்தியப்பிரமாண நிகழ்வை நடத்தி வைத்தார்.

திருகோணமலை மாநகர சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, மொறவெவ பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகிய 8 சபைகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களே இந்த நிகழ்வில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.