சிறுநீரகக் கோளாறுள்ள மகனுக்காக மருமகளின் கிட்னியை வரதட்சணையாகக் கேட்ட மாமியார் – பீகாரில் அதிர்ச்சி!

மகனுக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கும் காரணத்தால் மருமகளின் கிட்னியை மாமியார் வரதட்சணையாக கேட்டு துன்புறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

வரதட்சணையாக கிட்னி
வரதட்சணையாக மணப்பெண்ணின் குடும்பத்திடம் இருந்து நகை, பணம், கார் போன்றவற்றை தான் வாங்குவார்கள். ஆனால், இங்கு கிட்னியை தானமாக கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய மாநிலமான பீகாரில் தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் படி, 2021-ம் ஆண்டு திருமணமான தீப்தி என்ற பெண்ணை மாமியார் குடும்பத்தினர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

அதாவது, தீப்தியின் கணவருக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கும் காரணத்தால் மருமகளின் கிட்னியை வரதட்சணையாக மாமியார் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

அதற்கு, மருமகள் மருத்துள்ளதால் தாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தீப்தியின் புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார் கணவர் உட்பட மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.