விடுவிக்கப்பட்ட கற்கோவளம் இராணுவ முகாம் அருகில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்!

யாழ். பருத்தித்துறையில் மனித மண்டையோட்டுடன் கூடிய மனித எலும்பு எச்சங்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில் உள்ள பகுதியிலேயே மண்டையோட்டுடன் கூடிய மனித எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 78 வயதான முதியவர் ஒருவர் காணாமல்போயிருந்தார். ஆகவே, அவரது எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாகப் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.