வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த சி.ஐ.டி. – கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் தீவிர விசாரணை.
வவுனியா சிறைச்சாலைக்குத் திடீரென வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சி.ஐ.டி. குழுவினர் வவுனியா சிறைச்சாலையைச் சோதனை செய்துள்ளதுடன், அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதேநேரம் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காக அனுராதபுரத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சி.ஐ.டியினர் சிறைச்சாலைகளில் விசாரணை வேட்டையில் களமிறங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
