தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணி – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு.

யாழ். தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளைத் தவிர்த்து, அதனைச் சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்கப் பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர், பிரதேச செயலர் ஊடாகக் காணி உரிமையாளர்களுக்குக் காணிகளை கையளிப்பார்.

அதேவேளை, தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் காணி உரிமையாளர்க்ளுக்குக் காணியின் பெறுமதி நட்டஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விகாரைப் பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.