துபாயில் 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயின் ஜுமேரா பகுதியில் உள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மெரினா பின்னாக்கிள் சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 47 வது மாடியில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டு வேகமாக பரவியது. துபாய் தீயணைப்புத் துறை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்து 3,820 குடியிருப்பாளர்களை மீட்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் துபாய் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
