கத்தாரில் பல இடங்களில் ஈரான் பயங்கரமான தாக்குதல்!

ஈரான் கத்தார் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கத்தார் தலைநகர் தோஹாவின் மீது வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றியதாகவும், பல இடங்களிலிருந்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அல் ஜசீரா சற்றுமுன் தெரிவித்துள்ளது.

வானத்தில் பல இடங்களில் தீப்பிழம்புகள் தெரிந்தது எனவும், அது வான் பாதுகாப்பு அமைப்பா அல்லது ஏவுகணைகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி, பலத்த வெடிச்சத்தங்களும் கேட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தும் என்று ஈரான் இராணுவ அமைச்சகமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்னர் கத்தாரின் வான்வெளி முழுமையாக மூடப்பட்டதாக கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பான செய்தி கத்தாரில் இருந்து வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.