கோடரியால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை – மட்டக்களப்பில் கொடூரம்.
மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் கோடரியால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு – குசலானமலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய வீரையா விஜயகாந் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு, கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சந்தேகனபரான உறவினர், சம்பவ இடத்தில் இருந்த இளைஞரின் தாயைத் தாக்கி காயப்படுத்திவிட்டு பின்னர் இளைஞரை கோடரியால் தாக்கிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
