வாடகை வீட்டில் தங்கியிருந்த 30 வயது பெண் சடலமாக மீட்பு!

வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலென்னவத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்த பெண்ணே நேற்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்று பிலியந்தலைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமானது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.