ரயில் மோதி ஒருவர் பரிதாப மரணம்!
மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுர்து மாவத்தை நோக்கிச் செல்லும் வீதியில் ரயில் மார்க்கத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, பெரியமுல்ல பள்ளி வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
…….
