ரூ.2 கோடி ஆசையில் சைபர் மோசடியில் சிக்கி உயிரை மாய்த்த முதியவர்

பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் ஏமாந்த முதியவர் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த 1-ம் திகதி அன்று தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அப்போது, அவர் தன்னை பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி என்று கூறிக்கொண்டார். மேலும், அவர் பழங்​கால நாண​யங்​களை அரசு வாங்​கு​வ​தாக​வும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்​ப​தாக​வும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய துபே தன்னிடம் இருந்த பழங்கால நாண​யங்​களின் படங்​களை மோசடி நபருக்கு அனுப்பியுள்ளார். இதற்காக, துபேவுக்கு ரூ.66.75 லட்​சம் வழங்​கு​வ​தாக​வும் செய​லாக்க கட்​ட​ண​மாக ரூ.520 செலுத்​து​மாறும் அவர்கள் கூறியுள்ளார்.

இதனை நம்பிய துபே அவர்களுக்கு பணம் அனுப்பியுள்ளார். ஆனால், வரி மற்​றும் ஜிஎஸ்டி கட்​ட​ணம் செலுத்த மேலும் பணம் வேண்​டும் என்று அவர்கள் கூறியதால் பலரிடம் கடன் வாங்கி ரூ.37,000 அனுப்பி வைத்​துள்​ளார்.

இதனை தொடர்ந்தும் அவர்கள், ரூ.10,000 டெபாசிட் தொகை கேட்டவுடன் தான் துபேயின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. அப்போது அவர்கள் துபேயிடம் ஏமாற்றப்பட்டதைக் கூறியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த துபே தனது தந்தை உரிமம் வாங்கி வைத்த துப்​பாக்​கி​யால் சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்​டார்.

Leave A Reply

Your email address will not be published.