அமெரிக்கத் தீர்வை வரிக் கொள்கை குறித்த ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

அமெரிக்க அரசால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தூதுக்குழுவுக்கும் இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.
…………………..

Leave A Reply

Your email address will not be published.