தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்துப் போராட்டம்.

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் இன்று இடம்பெற்றது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவோம் போன்ற வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.