வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் பத்து மாணவர்கள் 9 ஏ பெற்று சாதனை.

வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் 10 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகியுள்ளன. அந்தப் பெறுபேற்றிலேயே வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் காண்டீபன் கிருஸ்சிககேசன், ஸ்கந்தராசர்மா கஜானன், குணதரசர்மா சருஜசர்மா, இராமகிருஸ்ணன் வோகித், சிவராசா தட்சாயினி, கந்தராசா டிஜானா, திலகநாதன் ஹரிணி, உதயதாசன் யதுசன், நிலாந்திரன் துபதாசன், யோகேஸ்வரன் ரஜீவ் ஆகிய 10 மாணவர்களும் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், 2 மாணவர்கள் 8ஏ,பி சித்திகளையும், 4 மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும், ஒரு மாணவர் 7ஏ,பி,சி சித்தியையும், ஒரு மாணவர் 7ஏ பி,எஸ் சித்தியையும், ஒரு மாணவர் 7ஏ 2சி சித்தியையும் பெற்றுள்ளனர்.
………..

Leave A Reply

Your email address will not be published.