வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் சிப்பாய் சிக்கினார்.

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாயே நேற்று வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.