அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை மாத்தறைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாத்தறை பறவைகள் சரணாலயத்துக்குச் செல்லும் பாலத்துக்கு அடியில் உள்ள நீர்நிலையில் இருந்து நேற்று மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று மாத்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி உயரமுடைய 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.