தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 10,000 பொருட்கள் அடங்கிய உணவு பொதி

கோவிட் 19 தொற்றுநோயால் வீடுகளைத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ .10,000 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய உணவு பொதியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவரான பசில் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இராணுவத்தின் உதவியுடன் வீட்டிற்கு அனுப்பப்படும்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.