ஆண் குழந்தை ஒன்று வயலில் இருந்து மீட்பு! – பெற்றோரைத் தேடி வலைவீச்சு.
குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாள்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்தே நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மேற்படி குழந்தை மீட்கப்பட்டுள்ளது என்று மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
வயல் பகுதியில் குழந்தை ஒன்று இருப்பதாகப் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேற்படி குழந்தை மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குழந்தையின் பெற்றோர் குழந்தையை வயலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மாவத்தகம பொலிஸார், குழந்தையின் பெற்றோரையும் தேடி வருகின்றனர்.
