கொழும்பில் களியாட்ட விடுதிக்கு முன்பாகத் துப்பாக்கிப் பிரயோகம்.

கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவு நேரக் களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்று தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு நேர களியாட்ட விடுதிக்கு வருகை தந்திருந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது அங்கிருந்த நபர் ஒருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியால் நான்கு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்தத் துப்பாக்கிச்சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த இருவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.