சமகால அரசியல் நிலவரம் குறித்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.