வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் காயம்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேச குடிமனைப் பகுதிக்குள் உள்நுழைந்த குரங்குக் கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குரங்குகளின் அட்டகாசத்தால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளன. பயன்தரும் மரங்களும், பயிர்களும் அழிவடைந்துள்ளன.

மக்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது பயப் பீதியில் இருக்கின்றார்கள்.

வந்தாறுமூலை, பேக்வீதியில் நேற்று வீட்டைவிட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார். அவரின் காலில் பாரிய தசைப் பகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் குரங்குகடிக்கு உள்ளாகிக் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்களாவர்.

Leave A Reply

Your email address will not be published.