தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 4 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்..

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைப் படகு ஒன்றைக் கைப்பற்றினர். அந்தப் படகில் இருந்த 4 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அந்த மீனவர்களையும், இழுவைப் படகையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர், இழுவைப் படகுடன் 4 இந்திய மீனவர்களையும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் 4 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

மேற்படி மீனவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.