ஏறாவூர் விபத்தில் இளைஞர் மரணம்!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கொங்கிறீட் தூணில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சமபவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
