மட்டு. மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் மரணம்.
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்கி இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மகிழவெட்டுவானைச் சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே யனாய் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முற்றத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்ட அயலவர்கள், உயிரிழந்த தாயின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
