செம்மணியில் பச்சிளம் குழந்தையின் என்புத்தொகுதி!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தையின் என்புத்தொகுதியொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் என்புத்தொகுதி உடையும் நிலையில் மிகப் பலவீனமாக இருந்ததால், என்புத்தொகுதியைச் சுற்றியிருந்த மணல் பிடிமானங்கள்களுடன் இணைந்த வகையில் சுற்றிக் கட்டப்பட்டு, அது பத்திரமாக மீட்கப்பட்டது.
