யானை தாக்கி ஒருவர் மரணம் – வவுனியாவில் துயரம்.

வவுனியா, பெரியதம்பனை பகுதியில் யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்த நபர் மீதே யானை தாக்கியுள்ளது.

சம்பவத்தில் கிடாப்பிடிச்சகுளம், நட்டாங்கண்டலை வதிவிடமாகக் கொண்ட சண்முகராசா உதயராசா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.