தென்மராட்சியில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! – ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்.

யாழ்ப்பாணம், தென்மராட்சியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிப்பர் , கூலர் , கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஆண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.