ரணிலுக்கு சி.ஐ.டி. மீண்டும் அழைப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் நடந்து வரும் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.