ரணிலுக்குப் பிணை வழங்குவதை எதிர்த்தமைக்குச் சுமந்திரன் கண்டனம்.
“பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை. ஆனால், நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்கிரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்தமை என்பது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகின்றது .”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்திலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
