முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்திடும் விஜய்: சர்ச்சையான விநாயகர் சிலை

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தவெக தலைவர் விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை (27) விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பிரதிபலிக்கும் வகையில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

அந்த விநாயகர் சிலை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடுவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் சட்டை பையில் விஜய் புகைப்படம் இருந்தது.

இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்து வழிபட்டுள்ளனர்.

பொலிஸ் தரப்பில் அந்த சிலைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் என்ற பெயர் பலகையை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.