முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்குச் சர்வதேச நீதியைக் கோரும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தவிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உப தவிசாளர் வரதன் , பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பங்குத் தந்தையர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
………….


