பிக்பாஸ் சீசன் 4 தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு.

கடந்த 3 சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறையும் நடிகர் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகை உள்ளிட்ட 16 பேருடன் இருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சி ஒவ்வொரு முறை ஒளிபரப்பு செய்யப்படும் போதும் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி குரல்கள் எழுவதும், சில அமைப்புகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டக் களத்தில் குதிப்பது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே நிகழ்ச்சிக்கு விளம்பரமாக மாறிவிடுவதும் உண்டு.

இந்நிலையில் இந்த முறையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தமிழர்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும், தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.