பிரதேச மக்களால் 3 கொள்கலன்களில் கோடா கசிப்பு அழிப்பு.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் பிரதேச மக்களால் 3 கொள்கலன்களில் கோடா மற்றும் வெற்று கோடா கொள்கலன்கள் ஆகியன அடையாளம் காட்டப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் இவ்வாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 3 கொள்கலன்களில் கோடா, வெற்று கொள்கலன் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான், சோலை உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோத கசிப்பு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்துள்ளனர். இருப்பினும் பொலிஸாரின் நடவடிக்கையால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இதேபோன்று கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியினை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். கிராமங்கள் தோறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அண்மைக் காலமாக பொதுமக்கள் இணைந்து தடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.