ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 700 பேர் பலி!
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு 11.57 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, 4.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரையிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
