தேர்தல் முடிவுகள் வெளிவந்து முடிவதற்குள் வெற்றியை அறிவித்த டிரம்ப்

 

அமெரிக் தேர்தல் களத்தில் வாக்குகள் தொடர்ந்து எண்ணிக்கையில் இருந்து கொண்டு உள்ள நிலையில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெற்றியை அறிவித்துள்ளார்.

வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் பிடென் தற்போது தேர்தல் கொலேஜ்  நிலவரம்  236-213 என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும், நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், வாக்குப் பெட்டிகள் மூடப்பட்ட பின்னர் வாக்களிப்பு நடக்க முடியாது என்று கூறி, தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் தோன்றி தேச மக்களை நோக்கி உரையாற்றும் போது டிரம்ப் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இருப்பினும், போர்க்கள மாநிலங்களின் இறுதி முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

மிகவும் தீர்க்கமான மாநிலமாகக் கருதப்படும் புளோரிடா மாநில முடிவுகள்  சிறிது நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட போது டிரம் அதிக வாக்குகளை பெற்றிருந்தார், பிடனுக்கு  சிறு பின்னடைவை இது ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.