யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு! – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்.

யாழ்ப்பணம், குரும்சிட்டி – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நபரே வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் படுகாயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
……….

Leave A Reply

Your email address will not be published.