குளவி கொட்டி பெண் மரணம்! – மஸ்கெலியாவில் சோகம்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா, புரவுன்ன்சீக் தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிக்கச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணே குளவிக் கொட்டுக்கு இலக்கானார்.

அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
…………

Leave A Reply

Your email address will not be published.