மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் மரணம்.

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு கலஹாவில் இடம்பெற்றுள்ளது.

தெல்தோட்டைப் பகுதியில் இருந்து கண்டி நகர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கலஹா நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் பாதையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த 73 வயதுடைய அந்தப் பெண் கலஹா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
………………………..

Leave A Reply

Your email address will not be published.