தந்தை பொல்லால் தாக்கியதில் மகன் மரணம்!
தந்தை பொல்லால் தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கேகாலை, தேவாலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுவத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
படுவத்த – ஹலமட பகுதியை சேர்நதத 35 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளார்.
தந்தை தனது மகன் மற்றும் மனைவியைப் பொல்லால் தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மனைவி கோகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தேவாலேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
