திலீபனின் ஊர்திக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தத் திரண்ட மக்கள்.

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்திப் பவனி இன்று வவுனியாவை வந்தடைந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்துடன் ஊர்திப் பவனி வருகின்றது.

இந்நிலையில், வவுனியா மாநகர சபையின் முன்றலில் உள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் திடலுக்கு முன்னால் வந்த குறித்த ஊர்திக்குக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் மலர் தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஊர்தி அங்கிருந்து வவுனியா வடக்கின் ஊடாக முல்லைத்தீவு நோக்கிச் சென்றது.

Leave A Reply

Your email address will not be published.