நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரணிலுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது இல்லை! – ஐ.தே.க. விழாவில் மனோ தெரிவிப்பு.

நான் ஒருபோதும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஓர் இல்லம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகும்.

நான் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் அவருடன் இருந்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சி உடைந்த போதும் நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தேன் என்பது அவருக்குத் தெரியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.