நல்லூரில் தியாக தீபத்துக்குச் சுமந்திரன் அஞ்சலி! – ஆவணக் காப்பகத்தையும் பார்வையிட்டார்
யாழ். நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் ஆவணக் காப்பகத்துக்கு நேரில் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அங்கிருந்த திலீபனின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஆவணக் காப்பகத்தையும் பார்வையிட்டார்.
தியாக தீபத்தின் நினைவுகளைத் தாங்கிய ஆவணக் காப்பகம் நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணக் காப்பகத்துக்கு நேரில் சென்று திலீபனுக்குச் சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.



