கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணியாளர்களினால் குருதித்தானம் செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கிளிநொச்சி பிராந்திய குருதி வங்கியில் காணப்படும் குருதி தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மாவட்ட பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் (அலுவலக உத்தியோகத்தர்கள், வைத்தியநிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள்) இன்றைய தினம் குருதிக்கொடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக குருதி கொடையினை வெளியிடங்களுக்கு சென்று பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமத்ததினால் தற்பொழுது குருதி வங்கியில் குருதி தட்டுப்பாட்டினை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குருதியினை பிராந்திய குருதி வங்கியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள குருதிகொடையாளர்கள் அனைவரையும் இரத்த தானம் செய்ய வரவேற்கின்றனர்.


உயிர்காக்கும் உன்னத சேவை குருதிக்கொடை.பங்காளியாகுங்கள்.